கமல், ரஜினியை ஒப்பிடுகையில் விஜய் இப்படிப்பட்டவரா ? ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்று ரஜினி, கமல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் கடைசி வரை வராதது, எஸ்.பி.பி ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், மோகன், சிவக்குமார், அர்ஜூன், கடைசியாக அஜித், விஜய் என மொத்தம் 4 தலைமுறைக்கு எஸ்.பி.பி பாடல் பாடியுள்ளார்.

குறிப்பாக ரஜினி மற்றும் கமலின் பல படங்களில் எஸ்.பி.பியின் குரல் இல்லாமல் இருக்கும். அதிலும் ரஜினியின் ஓப்பனிங் பாடல் அனைத்தும் ஹிட் அடிக்க முக்கிய காரணம் எஸ்.பி.பியின் குரல் தான், அந்தளவிற்கு எஸ்.பி.பியின் குரல் ரஜினிக்கு அந்தளவிற்கு சரியாக பொருந்தும்.

ரஜினிக்கு மட்டுமின்றி, கமல், மோகன் சிவக்குமார், அர்ஜுன் என அவர் யாருக்கு பாடினாலும், அது அப்படியே அந்த நடிகருக்கு பொருந்திவிடும்.


இந்நிலையில் அவர் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த நிலையில், அவருக்கு மக்கள், ரசிகர்கள், அரசு அதிகாரிகள், திரைப்பிரபலங்கள் என நுங்கம்பாக்கத்திலும் செங்குன்றத்திலும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இதனால், இவருக்கு அஞ்சலி செலுத்த முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், பாடகர்கள், பாடகிகள், தயாரிப்பாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக ரஜினி, கமல் நிச்சயம் வருவார்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் வரவில்லை. எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திய திரைப் பிரபலங்களை விரல் விட்டு எண்ணும் அளவுக்கே வந்திருந்ததால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னணி நடிகர்கள் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டதாகவே பலர் நினைத்தனர்.


இதனால் எஸ்.பி.பி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எஸ்.பி.பி நடிகர் விஜய்யை காட்டிலும் ரஜினி, கமலுக்கு ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

ஆனால் அவர்கள் யாரும் கொரோனா அச்சத்தால் அஞ்சலி செலுத்த வராத நிலையில் பிரியமானவளே படத்தில் மகனாக நடித்த விஜய் தனது தந்தை எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த வந்தது விஜய் மீதான மரியாதையை அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

>தனது மூச்சையே இசையாக ஒலித்த எஸ்.பி.பிக்கு நேரில் அஞ்சலி செலுத்த திரைத்துறையில் பலரும் வரவில்லை. கொரோனா அச்சமே இதற்கு முக்கியக் காரணம்.

யாருக்கு அது எப்படி வந்து தொற்றும் என்பதே தெரியாமல் இருப்பதால் பலரும் தங்களின் உடல் நிலையைக் கருதியும், தங்களால் மற்றவர்களுக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதாலும் தான் பெரும்பாலும் வரவில்லை.

இந்த நிலையில் விஜய் வந்து போனது ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது

No comments: