இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான பயிற்றுவிப்பு

என்.ஹரன்


இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி முதல் கட்டுநாயக்க ரமதா விடுதியில் இடம்பெற்றது .
நாட்டின் பல பாகங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மூன்று இனத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தும்
இளம் ஊடகவியலாளர்ள் 25 பேர் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

Media Corps புலமைப்பரிசில் செயற்திட்டத்தின் ஐந்தாவது
குழுவினது இந்த பயிற்சிநெறி இடம் பெற்றது.

இந்நிகழ்வில் முரண்பாட்டு கூர் உணர்வு மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஊடக பயன்பாடுகள், பன்மைத்துவ விடயத்தில் கூருணர்வு, கையடக்கத்தொலைபேசி ஊடகவியல் போன்ற பயிற்சிகள் இடம்பெற்றதுடன் ஊடக பொருட்களும் கையளிக்கப்பட்டன.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட குறித்த ஊடகவியலாளர்கள் இந்த ஐந்து நாள் பயிற்சிக்கு முன்னர் ஒன்லைன் (Online) மூலம் இணைய வழி அமர்வுகள் (Webinar) நான்கு நாட்கள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

No comments: