தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல்


தேங்காய்க்கான அதியுச்ச நிர்ணய விலையை அறிவித்து நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்க்கும்,12 முதல் 13 அங்குலம் வரையிலான தேங்காய் 65 ரூபாய்க்கும்,12 அங்குலத்திற்கு குறைவான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: