மண்முனை தென் எருவில் பற்றில் உணவு விற்பனை நிலையங்கள் பரிசோதனை

 செ.துஜியந்தன்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் பிரதேசத்திலுள்ள பலசரக்கு கடைகள் மற்றும் உணவகங்கள் ஆகியன உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொதுச் சுகாதராப் பரிசோதகர்களினால் திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் எஸ். கிருஸ்ணகுமார் வழிகாட்டலில் பிரதம மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் தலைமையிலான குழுவினரே உணவுப் பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மண்முனை தென் எருவில் பற்றிலுள்ள கிராமங்களில் இயங்கும் பொதுச்சந்தைகள், பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், உணவகங்கள் ஆகியனவற்றிலுள்ள உணவுப்பொருட்களின் தரம், உற்பத்தி திகதி, காலாவதி திகதிகள் ஆகியன பரிசோதிக்கப்படுவதுடன் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்களும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

பொதுமக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பிராந்தியத்தில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு எதிராக  சுகாதாரப்பரிசோதகர் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பிரதம மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

No comments: