அம்பாரை மாவட்ட தொழில் நிலையத்தில் தொழில் தேடும் இளைஞர், யுவதிகள் பதிவு செய்யலாம்

 செ.துஜியந்தன்


அம்பாரை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தில் வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கான தொழில்,ஆலோசனை வழிகாட்டல் சேவைகள் அரச அதிபரின் வழிகாட்டலில் நடைபெற்றுவருவதாகவும் வேலையற்ற இளைஞர், யுவதிகள் தொழில் திணைக்களத்தில் தங்களது பெயர் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறும் அம்பாரை  மாவட்ட மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் என்.கங்காதரன் தெரிவித்தார்.

மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களம் தொழிலற்ற இளைஞர், யுவதிகளுக்கான பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிவருகின்றது. இதற்காக இணையத்தளம், ஊடாக பதிவு செய்தல், தொழில் திறவுகோல் சம்பந்தமான இயலுமைகள், ஆளுமைகள் பற்றிய மதிப்பிடல், தனியார் துறை பதவி வெற்றிடத்துக்கு பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு பெற்றுக்கொடுத்தல், தொழில் பயிற்சியை ஏற்படுத்திக்கொடுத்தல், சுய தொழிலை ஊக்குவித்தல் போன்ற சேவைகளுக்கு மேலதிகமாக பெற்றோர்களுக்கான விழிப்பூட்டல், பட்டதாரி மாணவர்களுக்கான விழிப்பூட்டல், தொழில் தேடுநர்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: