சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் குழு கூட்டம்

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க  அமைச்சின் கீழ் இயங்கும் சௌமியமூர்த்தி தொண்டமான்  ஞாபகார்த்த மன்றத்தின் குழு கூட்டம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்  அவர்களின் தலைமையில்    அமைச்சரின் அலுவலகத்தில்   நடைப்பெற்றது.  

இதன்போது மன்றத்தினூடாக மேற்கொள்ளபட்ட கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் குழு கூட்டத்தில்  கலந்துரையாடபட்டது.

இந்நிகழ்வில் மன்றத்தின் தலைவரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ,சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணிப்பாளர் கனேஷ் ஈஸ்வரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், அமைச்சின் அதிகாரிகள் மன்றத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

No comments: