இலங்கை பிரதமர்-இந்தியப் பிரதமர் ஆகியோருக்கிடையிலான காணொளி மூலமான கலந்துரையாடல் இன்று


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் காணொளி மூலமான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது, பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படும் என்று இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சுக்கள் தெரிவித்துள்ளன.

புதிய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதன்  பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான இடையில் இணையவழி இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொருளாதாரம் அரசியல் நிதி அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன் போது ஆராயப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

No comments: