நாட்டுக்கான ஒரு அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை ஸ்தாபிப்பதே எமது நோக்கம்- அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிப்பு


ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றிலே, 
நாட்டுக்கான ஒரு அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை ஸ்தாபிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த இவர் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான காலமும் கோரப்பட்டுள்ளது.நாட்டில் தற்போது இது தொடர்பான ஒரு விவாதம் காணப்படுகிறது.

அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட, இது தொடர்பான எதிர்மறை கருத்துக்களை முன்வைத்துள்ளமையை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாட்டுக்கான ஒரு அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை ஸ்தாபிப்பதே எமது நோக்கமாக இருக்கிறது“ எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: