இலங்கை அரசினால் கோரப்பட்ட நட்டஈட்டை வழங்க நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர் தரப்பு இணக்கம்


தீ விபத்துக்குள்ளான MT NEW DIAMOND கப்பல், தொடர்பில் இலங்கை அரசினால் கோரப்பட்ட 340 மில்லியன் ரூபா நட்ட ஈட்டை வழங்குவதற்கு கப்பல் உரிமையாளர் தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சட்ட மா அதிபருடனான கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தொடர்பாக இறுதித் தீர்மான எட்டப்பட்டுள்ளதாக சூழல் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லங்கதபுர தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பெருமளவு தொகையான மசகு மற்றும் டீசல் ஆகியவற்றை ஏற்றிவந்த MT NEW DIAMOND கப்பல் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடந்த 3 ஆம் திகதி தீவிபத்துக்குள்ளானது.

MT NEW DIAMON கப்பலில் ஏற்ப்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும், அது சார்ந்ததாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக ஏற்பட்ட செலவீனங்களை அடிப்படையாக கொண்டு 340 மில்லியன் ரூபா நட்டஈடு கோரப்பட்டது.

சட்ட மா அதிபரினால் இந்த நட்டஈட்டு கோரிக்கைக்கான அறிக்கை MT NEW DIAMOND கப்பலின் உரிமையாளர்களது வழங்கறிஞர் குழாமிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: