கிழக்கில் வரலாற்று பிரசித்திபெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய உற்சவம் தொடர்பான இணைப்புக்குழு கூட்டம்

 செ.துஜியந்தன்


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஆலய உற்சவங்கள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.


கலாசார உத்தியோகத்தர் ரி.பிரபாகரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ், கல்முனை வடக்கு சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் ஆர்.கணேஸ்வரன் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய தலைவர் இராசேந்திரம், கல்முனை பொலிஸ்நிலைய உத்தியோகத்தர்கள், திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு கிழக்கில் வரலாற்று பிரசித்திபெற்ற பாண்டிருப்ப ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய உற்சவங்கள் கொரோனா சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறவேண்டும் எனவும், ஆலய வீதிகள் கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்படக்கூடாது எனவும், பக்தர்கள் காவடி, கற்பூரச்சட்டிகள் எடுப்பதற்கும் தடை விதிக்கவேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இனி வரும் காலங்களில் கல்முனைப் பிரதேசத்தில் நடைபெவுள்ள ஆலய உற்சவங்கள், கடைப்பிடிக்கும் விரதங்கங்கள் பிரதேச  சுகாதாரப்பிரிவினரின் வழிகாட்டல் ஆலோசனையின் பேரில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே நடைபெறவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

கிழக்கில் வரலாற்று புகழ்பூத்த சக்தி ஆலயங்களில் ஒன்றாக பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் விளங்குகின்றது இவ் அலய வரடாந்த உற்சவம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகி 18 தினங்கள் உற்சவம் நடைபெற்று செப்டெம்பர் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ள தீ மிதிப்பு வைபத்துடனும் மறுநாள் பாற்பள்ளய நிகழ்வுடன்  உற்சவம் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. No comments: