வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இரு பெரிய தலைவர்கள் இல்லாததால் அந்த வெற்றிடத்தை நிரப்பும் தகுதி விஜயகாந்துக்கு மட்டுமே உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் ராமேஸ்வரத்தில் பேட்டி

 (க.கிஷாந்தன்)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இன்று ராமேஸ்வரம் சென்றுள்ளார். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியும்,  தனது குடும்பத்தினருக்காகவும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.  அதன்பின் இன்று இரவு ராமநாதசுவாமி கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்த அவர் கொரோனா வைரஸ் காரணமாக தொண்டர்களை சந்திக்காமல் சென்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் :

இரு பெரிய தலைவர்கள் இல்லாததால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தங்களின் பலத்தை தெரிவிப்பதில் அனைத்து கட்சியினருக்கும் சிரமாமக  இருக்கும். இது பெரும் தலைவர்கள் இருக்கும்போதே கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர் விஜயகாந்த் எனவே இருபெரும் தலைவர்களின் வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்புவார். அதற்குண்டான தகுதி அவருக்கு மட்டுமே உள்ளது.  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து நிற்கவே தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பின்பு விஜயகாந்த்  அது தொடர்பாக அறிவிப்பார். 

மேலும் தொடர்ந்து பேசிய அவர்,

அதிமுக பாஜக கூட்டணியில் உட்கட்சி பூசல் உள்ளதாகவும், கொரனோ வைரஸ் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு குறையும் நிறையும் உள்ளது எனவும் ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டு அதன் பின் அவரிடம் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசலாம் என பேசிய அவர் உதயநிதி ஸ்டாலின் கருத்திற்கு என்னால் பதில் கூற முடியாது அவரை தன்னை நிரூபிக்க இன்னும் நிறைய விஷயம் உள்ளது என அவர் தெரிவித்தார்.

No comments: