கொழும்பில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட சாரதிகள் கைது


கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட ஆயிரத்து 200 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பஸ் முன்னுரிமை திட்டம் அமுல்படுத்தப்பட சந்தர்ப்பத்தில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் குறித்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் செயற்படுத்தப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையூடாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: