நாளை முதல் முட்டையின் விலையை குறைப்பதற்குத் தீர்மானம்

நாட்டின் அனைத்து முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் ஒரு முட்டையின் விலையைக் நாளை முதல் 2 ரூபாவினால்  குறைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வெள்ளை முட்டையின் மொத்த விலை  19.50 ரூபாவாகவும்,சிவப்பு முட்டையின் விலை 20 ரூபாவாகவும் குறைக்கப்படும் என்று சங்கத்தின் தலைவர்  ஆர்.எம். சரத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு வெள்ளை முட்டையின் சில்லறை விலை 21 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் விலை 22 ரூபாவாகவும் குறைக்கப்படும்.

No comments: