ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு


சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கட்டட ஆய்வு அமைப்பு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குறிப்பாக கொழும்பு – ஆமர் விதி, தும்முல்ல சந்தி உள்ளிட்ட சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மலையகத்திலும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: