இலங்கைக்கு நட்டஈட்டை வழங்கத் தயார்-நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர்


442 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழங்க தயாராக இருப்பதாக நியூ டைமண்ட் கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான இணக்கப்பாட்டை சட்ட மா அதிபருக்கு கப்பலின் உரிமையாளர் அறிவித்துள்ளார் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர்கள் சட்டத்தரணிகளிடம் முன்னதாகவே 340 மில்லியன் ரூபாய் கோரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும் தீ விபத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த நிபுணர் மதிப்பீட்டைத் தொடர்ந்து மேலும் இழப்பீட்டுத் தொகையை கோர தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: