புலி இறைச்சி விற்பனை- மூவருக்கு விளக்கமறியல்
கண்டி உடதும்பர பகுதியில் சட்டவிரோமான முறையில் புலி இறைச்சியை விற்பனை செய்த 3 பேர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த சந்தேக நபர்களை தெல்தேனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை இம்மாதம் 28ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்றிகளை வேட்டையாடும் நோக்கத்தில் தயாரித்து வைக்கப்பட்டிருந்தப் பொறியில் சிக்கி உயிரிழந்திருந்த புலியை இவ்வாறு இறைச்சிக்காக விற்பனை செய்துள்ளனர்.
இந்நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
No comments: