அட்டன் நீர்வடிகாணில் ஒருத்தொகை ஆள் அடையாள அட்டைகள் மீட்பு..

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


அட்டன் நகர பிரதான வீதியின் வடிகாணிலிருந்து அடையாள அட்டைகள், ஏ.டி.எம்.காட் மற்றும் பணப்பைகள்  என்பன மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

நகரசபை ஊழியர்கள் 17/09/2020 வடிகாண் துப்பரவு வேலையில் ஈடுபட்ட போதே   மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

அட்டன் நகரின் பிரதான வீதியில் நீர் வடிகாணில் மலக்கழிவுகள் கால்வாய் இணைக்கப்பட்டுள்ளதாக அட்டன் டிக்கோயா நகரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து நகரபையால் நகரின் பிராதன வீதீயில்   நீர்வடிகாண் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே 06 அடையாள அட்டைகள், 05 பணப்பைகள்,02 ஏ.டி.எம்.காட் என்பன  ஊழியர்களினால் மீட்கப்பட்டு அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பணப்பபையில் பணம் எதுவும் இருக்கவில்லை என தெரிவித்த பொலிஸார் தீபாவளி காலங்களில் நகருக்கு வரும் பொது மக்களிடமிருந்து  திருடர்களினால் களவாடப்பட்டவையாக இருக்காலம் என சந்தேகிப்பதுடன் இதற்கு முன்னரும் இவ்வாறு அடையாள  அட்டைகள் மீட்கப்பட்டு அவை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தனர்.

இந் நிலையில் இன்று மீட்கப்பட்ட அடையாள அட்டையின் உரிமையாளர்களை வரவழைத்து விசாரணையின் பின்னர் ஒப்டைக்க நடவடிக்கை எடுப்பதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


No comments: