சபாநாயகர் தலைமையில் இன்று பாராளுமன்றம் கூடுகிறது.

பாராளுமன்றம் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக தெரியவந்துள்ளது

சபாநாயகர் அறிவிப்பு, மனுதாக்கல் உட்பட பிரதான சபை நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் விவாதம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் 2020 வருட நடுப்பகுதியில் அரசாங்கத்தின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கை என்பன குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளதாகவும்,நாளைய தினம் உற்பத்தி வரிச் சட்டத்தின் கீழான ஒன்பது ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆறு தீர்மானங்கள் என்பன விவாதிக்கப்படவுள்ளதாகவும்,நாளை பிற்பகல் ஒரு மணி முதல் பிற்பகல் ஏழரை மணி வரையும், நாளை மறுதினம் முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் ஏழரை மணிவரையும் அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவுதட தெரியவந்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன்தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் நடைபெறவுள்ளது.

அன்றையதினம் முற்பகல் 10.30 மணி முதல் 6.30 மணிவரை அமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இவ்விவாதத்தில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: