தீ விபத்துக்குள்ளான கப்பலின் உரிமையாளர் நிறுவனத்திடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை


இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் கடந்த தினம் தீ விபத்துக்கு உள்ளான MT NEW DIAMOND எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி ரூபாயின் இழப்பீடாக பெற்றுக் கொள்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களம் எழுத்து மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

குறித்த எழுத்து மூல கோரிக்கை சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவால் குறித்த நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலை அணைப்பதற்காக இணைந்துக் கொண்ட இந்நாட்டு நிறுவனங்களுக்கு அடிப்படை இழப்பீடாக 34 கோடி ரூபாவினை பெற்றுக் கொடுப்பதற்கு குறித்த நிறுவனம் இணங்கியுள்ளதாக இதற்கு முன்னர் அவர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: