சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு


சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கற்றல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 17ம் திகதி வரை சாதாரண தர மாணவர்களுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2020 ம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைகள் 2021 ஜனவரி மாதம் 18ம் திகதி தொடக்கம் ஜனவரி 27ம் திகதி வரை நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சாதாரண தர பரீட்சைக் காலப்பகுதியில் சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதோடு பெப்ரவரி முதலாம் திகதி முதல் மீண்டும் சகல பாடசாலைகளும் ஆரம்பமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: