புதிய அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முழு ஆதரவை வழங்கும்


புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவினை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வழங்கவுள்ளதாக அதன் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

19 ஆவது திருத்தம் காரணமாக நாட்டில் பாரிய அரசியல் பிரச்சினை ஏற்பட்டதை நாட்டு மக்கள் நன்கு அறிந்துகொண்டதாகவும், 20 ஆவது புதிய திருத்தம் தொடர்பாக நேர்த்தியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து, அதில் இடம்பெற வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய உள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர  குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் ஜனாதிபதியின் அதிகாரங்களை, பிரதமரும், சபாநாயகரும் கையகப்படுத்தி செயற்படும் நிலைமை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக பாரிய அதிகார போட்டி ஏற்ப்பட்டதோடு, பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளதோடு சபாநாயகர் தலைமையில் ஒரு தரப்பினர் இணைந்து கொண்டு, படையினர் மற்றும் அதிகாரிகளை அழைத்து தனித்து செயற்படும் ஒரு நிலைமை தோற்றுவிக்கப்பட்டதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு காரணங்கள் காரணமாக 19 ஆவது சிர்திருத்தமானது மாற்றியமைக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தாங்கள் உள்ளதாகவும்,புதிய திருத்தத்திற்கு ஆதரவு வழங்க உள்ளதாகவும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதன்போது தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: