மறைந்த எஸ்.பி.பி யின் உடல் நாளை சென்னையில் நல்லடக்கம்


மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள், திரைத் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்.பி.பி.யின் உடல் சென்னை, செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நாளை  நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் இன்று பிற்பகல் காலமானார்.

இந்நிலையில், அவரது உடல் பொதுமக்கள், இரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்கான நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள், இரசிகர்கள் கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, எஸ்.பி.பி.யின் மறைவுக்கு திரைத் துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: