பாவனைக்கு உதவாத ஒரு தொகை கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது


கம்பளை-வெலம்பட-ரெகவல்பொல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பாவனைக்கு உதவாத ஒரு தொகைக் கழிவுத் தேயிலையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கழிவுத் தேயிலையுடன் அனுமதி பத்திரம் இல்லாத பாரவூர்தி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு,குறித்த பாரவூர்தியில் 1924 கிலோகிராம் 780 கிராம் கழிவுத் தேயிலையை காவற்துறை விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்து வெலம்பட காவல் நிலையதத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: