மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு


மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 432 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழிகாட்டலின் கீழ் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன்போது, ஹெரோயினுடன் 185 பேர் கைது செய்யப்பட்டதோடு சந்தேக நபர்களிடமிருந்து 99 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று  காலை 6 மணி தொடக்கம் இன்று அதிகாலை 5 மணி வரை இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது கேரள கஞ்சாவுடன் 114 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

No comments: