ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வு


புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த செயலமர்வு தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வு, ராஜகிரிய மத்திய வங்கி உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: