நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 43 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3092 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை கொரோனா தொற்றுறுதியான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று  வந்தவர்களில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2879 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் கொரோன தொற்றுறுதியான 201 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: