இன்று முதல் வழமைக்கு திரும்பிய பாடசாலைகள்

நாட்டில் காணப்படும் அனைத்து அரச பாடசாலைகளினதும் தரம் 6 முதல் 13ம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலை இன்று முதல் வழமை போன்று  திறக்கப்படவுள்ளன.

காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் வழமை போன்று பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள்  இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்,பேராசியர் கப்பில பெரேரா குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் 1ம்  தரம் தொடக்கம்  5ம்  தரம் வரையான பாடசாலைகள் எதிர்வரும்  8ம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டிருந்ந பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: