அம்பாறை நிந்தவூர் பிரதான வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலி


நிந்தவூர் பிரதான வீதியில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தொன்றில்  18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் பயணித்த  மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.No comments: