நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும், மாலைத்தீவில் இருந்து வந்த 6 பேருக்கும் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த இந்திய நாட்டவர் ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3081 ஆக அதிகரித்துள்ளது.


No comments: