இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்


இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 60 இலட்சத்தை நெருங்கியது. 49.41 இலட்சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்த எண்ணிக் கை 59 இலட்சத்து 92 ஆயிரத்து 532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 இலட்சத்து 41 ஆயிரத்து 627 பேர் குணமடைந்துள்ளனர், 9 இலட்சத்து 56 ஆயிரத்து 402 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 503 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: