வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை


ஊவா,கிழக்கு,வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு,வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் 12 மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலதத் காற்றும் வீசக்கூடும்,மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்பக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை  எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் குறித்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: