பாதுகாப்பு மதில் ஒன்று சரிந்து விழுந்ததில் குடியிருப்பு ஒன்று பகுதி அளவில் சேதம்

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 

நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக ஹட்டன் மென்டிஸ் அவின்யூ மாவத்தை பகுதியில் உள்ள பாதுகாப்பு சுவ ஒன்று சரிந்து விழுந்துள்ளமையால் குடியிருப்பு ஒன்றின் சமையலறை ஒன்று சேதமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் 06.09.2020.ஞாயிற்றுக்கிழமை இரவு 07.30மணியளவில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குறித்த குடியிருப்பில் இருந்த யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்ததோடு குறித்த பாதுகாப்பு சுவரின் அடிபகுதியில் மழை நீர் உட்புகுந்தமையினாலே குறித்த பாதுகாப்பு மதில் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: