கொரோனாவை தடுக்க நுவரெலியா பிரதேச சபை பெரும் பங்காற்றியுள்ளது.உலக சுற்றுலா தின நிகழ்வில் வேலு யோகராஜ் தெரிவிப்பு.

நீலமேகம் பிரசாந்த்

உலக சுற்றுலா தினம் 27.09.2020(ஞாயிற்றுக்கிழமை) நுவரெலியா பிரதேசத்தின் சுற்றுலா துறை சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வுக்கு  நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் தேசபந்து வேலு யோகராஜ் தலைமையேற்றியிருந்தார்.

இதன்போது உரையாற்றிய வேலு யோகராஜ், கொரோனா நுவரெலியா பகுதியில் பரவாமல் இருப்பதற்கு நுவரெலியா பிரதேச சபை பெரும் பங்காற்றியுள்ளது. 

விசே திட்டங்களினூடாக அடியோடு நுவரெலியா பகுதியில் கொடிய கொரோனாவை விரட்டியடித்துள்ளோம்.இதற்கு ஜனாதிபதி அவர்கள் விசேட வேலைத்திட்டங்களை எமக்கு ஏற்படுத்தி தந்ததோடு அமரர் ஆறுமுகன் தொண்டமானும் எமது வேலைத்திட்டங்களுக்கு பரிபூரண ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தார்.அதேபோல கூடிய சீக்கிரத்தில் நுரெலியா மீண்டும் சுற்றுலா பயணிகளால் அலங்கரிக்க இறைவனை பிரார்த்தித்துக்கொள்வோம் எனவும் கூறியமை குறிப்பிடத்தக்கது.

No comments: