உளநல பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு விசேட அம்புலன்ஸ் சேவைகள்


உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக  சுவசெரிய அம்புலன்ஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு  நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த திட்டம் முதல் கட்டமாக  கொழும்பு மாவட்டத்தில் இருந்து  ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் த அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் சுவசெரிய அம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக உள நலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுவதன் காரணமாக அவர்களின் நிலைமை மிகவும் மோசமடைவதாகவும்  சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 1920 எனும் துரித அழைப்பு இலக்கத்தைக் கொண்ட அம்புலன்ஸ் சேவையின் ஊடாக உள நலம் பாதிக்கப்பட்டவர்களை அடுத்த மாதத்தில் இருந்து கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்கள் சுனில் த அல்விஸ் தெரிவித்துள்ளார்.

No comments: