இன்று இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்


ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்  கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் மற்றும் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கடந்தவாரம் இடம்பெற்ற செயற்குழு  கூட்டத்தில்   எந்தவிதமான தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்ததாகவும் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்  தொடர்பில் இதன்போது இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் தலைமைத்துவம் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட வேண்டும்  என ஐக்கிய தேசியக் கட்சியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


No comments: