ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பனிமூட்டம் - வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


மத்திய மலைநாட்டில் தொடரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றமையால் குறித்த வீதிகளில்  வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றமையில் வீதிகளில் வழுக்கல் நிலை காணப்படுவதோடு,பனிமூட்டம் காரணமாக வாகனங்களில் மின்குமிழ்களை ஒளிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறும் பொலிஸார் மேலும் கோரியுள்ளனர்.


No comments: