நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 656 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 371 இலங்கையர்கள் இன்று அதிகாலை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதோடு,,ஜோர்தானில் இருந்து 285 இலங்கையர்கள் நேற்றிரவு 9.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: