பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி


பரீட்சை நிலையங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை என்பன அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்து 648 நிலையங்களில் குறித்த பரீட்சை இடம்பெறவுள்ளது.

அத்துடன், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி,  நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து 36 நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், பரீட்சை நிலையங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமையவே, உரிய அதிகாரிகள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

No comments: