ஹட்டன் பொலிஸ் வலயங்களுக்கு கீழ் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பி.சி. ஆர். பரிசோதனை முன்னெடுப்பு.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


நுவரெலியா மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவினரால் ஹட்டன் பொலிஸ் வலயத்திற்கு கீழ் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 09.09.2020.இன்று பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த பரிசோதனையானது பொது சுகாதார்களினால் முன்னெடுக்கப்பட்டது. 

இதன் போது ஹட்டன் பொலிஸ் வலயத்தின் கீழ் இயங்கும் ஹட்டன், கினிகத்தேனை, வட்டவளை, நோட்டன் பிரீஜ், மஸ்கெலியா, நோர்வுட், பொகவந்தலாவ, நல்லதன்னி ஆகிய எட்டு பொலிஸ் நிலையங்களில் பணிபுரிகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இந்த பி. சி. ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments: