விளையாட்டு கலாசாரத்தை உருவாக்குவது காலத்தின் தேவை-ஜனாதிபதி தெரிவிப்பு


ஆரோக்கியமான, ஒழுக்கமான மற்றும் சுறுசுறுப்பான சமூகத்தை உருவாக்கும் வகையில் விளையாட்டு கலாசாரத்தை உருவாக்குவது காலத்தின் தேவையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், கல்விக்கு இணையாக விளையாட்டை ஊக்கப்படுத்துவதன் மூலம் சரியானதொரு குடிமகனை சமூகத்திற்கு வழங்முடியுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தில் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கு பாரிய பொறுப்புள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டில் ஆர்வம் உள்ள பிள்ளைகளைத் தெரிவு செய்து சிறு வயதிலிருந்து அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்து மற்றும் தேசிய,  சர்வதேச ரீதியிலான பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டமொன்றின்  அவசியம் குறித்தும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதன்போது அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: