போதை பொருள் பாவனையால் தமிழ் சமூகம் சீர் கெடுகின்றது- தவராசா கலையரசன்

குமணன் சந்திரன்

உலக தரிசனம் அமைப்பின் பிராந்திய அபிவிருத்தி திட்ட நிறைவு விழா  இன்று(10)  நாவிதன்வெளி பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் பிரதி கல்வி பணிப்பாளர் வி. நிதர்சினி தலைமையில்   இடம்பெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் . யுத்தத்தின் வடுக்களை சுமந்த தமிழ் சமூகத்தின் இளைஞர்கள் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றமை எம்மை பின்னோக்கி நகர்த்தும் ஆதலால் பெரியோர்கள் இளையவர்களை வழி நடார்த்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு  அதிதிகளாக  உலக தரிசனம் அமைப்பின் தேசிய பணிப்பாளர் தனன் சேனாதிராஜா, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் , நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சகுணன் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,அதிபர்கள் , உலக தரிசன அமைப்பின் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது இப்பிரதேசத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றிய அதிகாரிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
No comments: