பதட்டம் அடைந்த கோலி 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப வெற்றி


 கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் பெங்களூர் அணி பந்து வீசிய போது முதலில் அனைவரும் சுட்டிக் காட்டிய தவறு உமேஷ் யாதவ்வை அணியில் தேர்வு செய்தது தான். 

அவர் முதல் போட்டி போலவே சொதப்பலாக ஆடினார். அடுத்து எல்லாமே தவறாக சென்றதை அடுத்து பெங்களூர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

கடந்த இரண்டு சீசன்களில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தன் முதல் போட்டியில் அபாரமாக ஆடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றாலும் உமேஷ் யாதவ் மட்டும் கவலை அளித்தார். அவர் 4 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்து இருந்தார். அவரது பந்துவீச்சு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இந்த நிலையில், பெங்களூர் அணியின் இரண்டாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிரடியாக பேட்டிங் ஆடியது. கேஎல் ராகுல் எந்த பந்துவீச்சாளரையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து ரன் குவித்து வந்தார். திட்டமிட்டு ஆடினார்

பஞ்சாப் அணிக்கு முதலில் அதிக ரன்களை வாரி வழங்கி அடித்தளம் அமைத்துக் கொடுத்தது உமேஷ் யாதவ் தான். கடந்த போட்டி போலவே இப்போதும் அவர் சொதப்பலாக பந்து வீசினார். 3 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்தார்.

உமேஷ் யாதவ் அணியில் தேர்வு செய்யப்பட்ட போதே அதிருப்தி அடைந்த ரசிகர்கள், அவர் ரன்களை வாரி வழங்கிய போது கடும் கோபம் அடைந்தனர். இணையம் முழுவதும் உமேஷ் யாதவ் கடுமையாக கேலி, கிண்டல் செய்யப்பட்டு விமர்சனத்துக்கு உள்ளானார்.

பஞ்சாப் அணி உமேஷ் யாதவ் ஓவர்களுக்கு பின் அனைத்து பெங்களூர் அணி பந்துவீச்சாளர்களையும் புரட்டி எடுத்து 206 ரன்கள் சேர்த்தது. பெங்களூர் அணிக்கு 207 ரன்கள் என்ற இமாலாய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த இலக்கு கோலி அணிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.


No comments: