சற்றுமுன்னர் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்றுறுதி


நாட்டில் மேலும் 9 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 5 பேர் மற்றும் பங்களாதேஷில் இருந்து வந்த 4 பேருமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3262 ஆக அதிகரித்துள்ளது.


No comments: