இன்று சில பகுதிகளில் 24 மணிநேர நீர் விநியோகத்தடை

வத்தளை பகுதியை அண்மித்த சில பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வத்தளை, தேலபொத, எவரிவத்த, வெலஅமுன, பலகல, கலாகாதுவ மற்றும் எலகந்த ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.No comments: