60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

60ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கும் செயற்திட்டம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில்,60 ஆயிரம் பட்டதாரிகளை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் 50,177 பேர் சேவையில் இணைந்துக் கொண்டதாகவும் அதில் 38,760 பேர் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் 29,156 உள்வாரி பட்டதாரிகளும் மற்றும் 20,322 வெளிவாரி பட்டதாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் 1000 துறவிகளும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு நியமனங்களைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு தலைமைத்துவம்,திறன்விருத்தி மற்றும் அனுகுமுறை மேம்பாடு குறித்த ஒரு வருடகால பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: