முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக தாக்கல் செய்துள்ள மனுவொன்றின் பிரதிவாதியாக ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமருக்கு அழைப்பாணை வௌியிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்தார்.

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலங்கள் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: