சுமார் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு

நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்  சுமார் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் சுமார்  5 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளையதினம் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: