கண்டியில் இடிந்து விழுந்த 5 மாடிக் கட்டிடம்


கண்டி – பூவெலிகட பகுதியில் 5 மாடிக் கட்டிடமொன்று வீட்டின் மீது இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த கட்டிடம் மண் தாழிறக்கத்தால் முற்றாக மண்ணால் புதையுண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்தில், வீட்டிலிருந்த இருவர் மற்றும் குழந்தையொன்றும் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு தம்பதியை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: