ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 444 சிறைக்கைதிகளுக்கு இன்று விடுதலை


ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறு தவறுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் பொது மன்னிப்பின் கீழ் 444 சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

மேலும் தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் மற்றம் 65 வயதிற்கு மேற்பட்ட சிறு தவறுகளுக்காக உள்ளவர்களே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments: