பயற்சிகளை நிறைவு செய்துள்ள 420 உதவி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில் நடவடிக்கை

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


கடந்த 2015ம் ஆண்டு உதவி ஆசியர்களின் நியமனம் தொடர்பில் மத்திய மாகாணத்தில் ஆசிரியர் கலாசாலைகளுக்கு சென்று பயிற்சிகளை நிறைவு செய்துள்ள 420 உதவி  ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஓரீரு வாரங்களில் அவர்களுக்கான நியமனம் வழங்கும் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

01.09.2020.செவ்வாய்க்கிழமை மத்திய மாகாண ஆளுனர் லலித்யூகமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்குமிடையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு மத்திய மாகாண ஆளுனரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதில்  ஊவா மாகாண முன்னால் அமைச்சரும் பிரதமர் மஹிந்தராஜபக்ஸவின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் மத்திய மாகாண முன்னால் சபைத்தலைவர் மதியுகராஜா என பலரும் கலந்து கொண்டனர். No comments: